
புத்ரா ஜெயா, ஜூலை 5-
எச்ஆர்டி கோர்ப் கணக்கு தணிக்கை அறிக்கை தொடர்பில் எம்ஏசிசியில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ கைரூல் டிஷாய்மி தாவூத் இன்று தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் தான் இன்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி தலைமையகத்திற்கு சென்றோம்.
எச்ஆர்டி கோர்ப்பின் கணக்கு தணிக்கை அறிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எம்ஏசிசி அதிகாரிகளிடம் ஒப்படைக்கக்கப்பட்டது.
குறிப்பாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் உத்தரவின் பேரில் புகாரும் செய்யப்பட்டது.
இந்த ஆவணங்களை அதிகாரிகள் முழுமையாக ஆய்வுகளை செய்யலாம். சரி பார்க்கலாம்.
உண்மையிலேயே இக் கணக்கறிக்கையில் முறைகேடுகள் இருந்தால் அது தொடர்பில் எம்ஏசிசி விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
அந்த விசாரணைக்கு ஒத்துழைக்க அமைச்சும் எச்ஆர்டி கோர்ப்பும் தயாராக உள்ளது
மேலும் நியாயமான முறையில் விசாரணை நடத்த எம்ஏசிசி அதிகாரிகளும் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
ஆகவே விசாரணை முடிவுக்காக அனைவரும் காத்திருப்போம் என்று மனிதவள அமைச்சில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ கைரூல் டிஷாய்மி தாவூத் கூறினார்.
இந்த விசாரணை முடியும் வரை யாரும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் ஹமீது கலந்து கொண்டார்.

