


சுங்கை பாக்காப் ஜூலை 5-
சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இங்கு பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக மனிதவள அமைச்சரின் சிறப்பு அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
சுங்கை பாக்காப்பில்
நாங்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்தின் வழி இங்குள்ள மக்கள் பக்கத்தானை ஆதரிக்கிறார்கள்.
குறிப்பாக இந்திய மக்களின் ஆதரவு பெரும் உற்சாகத்தை தருகிறது என்றார் அவர்.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இணைந்து கூட்டாக பிரச்சரத்தை மேற்கொண்டு வருகிறது.
சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி மக்கள் கண்டிப்பாக
பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிப்பார்கள்.
பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால் மட்டுமே இங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண முடியும்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை போல் எங்கும் பக்கத்தான் வெற்றி பெற வேண்டும் என்றார் அவர்.

