
கோலாலம்பூர் ஜூலை 5-
ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் பண்டார் துன் ரசாக் தொகுதியைச் சேர்ந்த கந்தனும் ஒருவர் ஆவார்.
பிரபல எழுத்தாளர் கமலாட்சி ஆறுமுகத்தின் பேரனான இவர் ஒரு சமூக சேவையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மற்றும் கல்வி கற்ற சமுதாயமாக நாம் விளங்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இவர் களத்தில் இறங்கி உள்ளார்.
நாளை நடைபெறும் மத்திய செயலவை உறுப்பினர் தேர்தலில் தம்மை வெற்றி பெற செய்யுங்கள் என்று பேராளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

