ஈஷாவின் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது! டாக்டர் சுரேந்திரன் கூறுகிறார்

கோலாலம்பூர் ஜூலை 7-
இணைய பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி விவாகரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் இன்று உறுதி அளித்திருப்பதை பெரிதும் வரவேற்கிறோம் என சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

கோம்பாக் செத்தியாவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் பாமி பட்சில் அவரின் தாயார் மட்டும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் .

இஷாவின் இல்லத்திற்கு அமைச்சரே நேரடியாக சென்றிருப்பது அவரின் கடமை உணர்வை பிரதிபலிக்கிறது..

இந்த விவகாரத்தில் அவர் கண்டிப்பாக நடவடிக்கை இருப்பார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

மேலும் இது போன்ற பகடிவதை டிக் டோக் சம்பவங்களுக்கு தகவல் தொடர்பு துறை அமைச்சு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இதற்கு காரணமாக தரப்பினர் நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையை அமைச்சு பெற்று தர வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்துகிறோம்.

இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

இனியும் இஷா போன்ற பெண்கள் பகடிவதை சித்திரவதைக்கு ஆளாகி தற்கொலை செய்யாமல் இருக்க இதுவே சரியான நடவடிக்கை ஆகும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles