
கோலாலம்பூர் ஜூலை 9-
இந்தியாவின் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இன்று மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார்.
இந்த சந்திப்பு இன்று காலை மக்களவையில் நடைபெற்றது.
இசையமைப்பாளரும் ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி புக்கில் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ளது
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அவர் நேற்று ரசிகர்களை சந்திப்பதற்காக மலேசியா வந்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை மக்களவைக்கு வந்திருந்தார். அங்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அவர் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் கலந்து கொண்டார்.

