மனநலம் பாதிப்பட்டவர்கள் எண்ணிக்கையில் கிள்ளான் மாவட்டம் முதலிடம்

ஷா ஆலம், ஜூலை 12 – சிலாங்கூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பதிவான மாவட்டமாக கிள்ளான் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 2020 மற்றும் 2024 க்கு இடையே ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 500 பேர் பொது சுகாதார கிளினிக்குகளில் அந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாழ்க்கையில் மன உறுதியைக் குறைத்து அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார சிக்கல்கள், குடும்பம் மற்றும் திருமண பிரச்சினைகள் மற்றும் பணியிட சவால்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன என்று பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

வாழ்க்கைச் சவால்களைச் எதிர்கொள்வதற்கு ஏதுவாக இத்தகைய நபர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து சமூக ஆதரவைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles