
செர்டாங், ஜூலை 15- பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உயிரைப் பறித்த அல்-மவாஸி அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் வான்வழித் தாக்குதலுக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகளை பெரிய நாடுகள் பாதுகாக்கத் தவறியதன் விளைவாக இஸ்ரேல் இராணுவத்தால் தொடரப்படும் தொடர்ச்சியான காட்டுமிராண்டித்தனமாக இது விளங்குகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஆகவே, காஸா மக்களுக்கு எதிராக ஸியோனிச ஆட்சி நிகழ்த்தி வரும் மனிதாபிமானமற்ற கொடுங்கோன்மையைக் கண்டிப்பதில் மலேசிய அரசாங்கம் வலுவான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
bernama

