
கோலாலம்பூர் ஜூலை 15-
தவறான முறையில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோர் அதற்கு முழு பொறுப்பேற்கும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணைய பகடிவதைக்கு இலக்கான இந்திய பெண் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் கொண்டு வந்தனர்.
சமூக வலைத்தளங்களில் இணைய பகடிவதை செய்யும் நபர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த புதிய சட்டம் பரிசீலிக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
ஈஷா ராஜேஸ்வரி போன்று இனி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதை தடுக்க இந்த சட்டம் அவசியம் என்றார் அவர்.

