
ஏற்பாடுஷா ஆலம், ஜூலை 16-
நாளை ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் சிலாங்கூர் ஜாப்கேர் கார்னிவலில் மொத்தம் 24 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
சமூக பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) இணைந்து நடத்தும் நிகழ்ச்சி Dewan Bankuet Event Horizon, Aras 3A Menara PAC பெட்டாலிங் ஜெயாவில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.
“இந்நிகழ்வில் ஜெயா குரோசர், 99 ஸ்பீட் மார்ட், போஸ் மலேசியா பெர்ஹாட், கன்சோர்டியம் லெபோராயா உத்தாரா-திமோர், ரூமா ஹோம், மேக்சிஸ் நியாகா மற்றும் பல நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://bit.ly/JobcarePJ என்ற இணைப்பின் மூலம் வருகையை உறுதிப்படுத்த பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் கோவிட்-19 தொற்றுநோயால் தங்கள் வருமானத்தை இழந்த நபர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசாங்கத்தின் முன் முயற்சியாகும் என்று அவர் சொன்னார்.

