
கோலாலம்பூர்: ஜூலை 17-
இணையப் பகடிவதை தொடர்பான சட்டம் இயற்றுவது குறித்து அமைச்சுகளுடன் விரைவில் விவாதிக்கப்படும் என்று
தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
நாட்டில் இணைய பகடிவதை பரவலாகி வருகிறது.
இதனால் இணைய பகடிவதைக்கான சட்டத்தை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடம் முழுமையாக விவாதிக்கப்படும்.
இணைய பகடிவதை வரையறையின் அடிப்படையில் மட்டுமல்லாமல்,
அபராதம் அல்லது விதிக்கப்படும் தண்டனைகளின் அடிப்படையில் கடுமையாக்கப்பட வேண்டிய சட்டங்கள் தற்போது உள்ளன.
உண்மையில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

