
மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு ரூ.5,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.
ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு அவரது தாய் நீடா அம்பானி ரூ.500 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அணிந்து வந்தார். உலகிலேயே விலை மதிப்புள்ள பொருட்களில் அந்த நெக்லஸும் ஒன்று என்று கூறப்படுகிறது
திருமணத்தில்பங்கேற்ற தனது நண்பர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கை கடிகாரத்தை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கி உள்ளார்
திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் இருந்து திருமணம் முடியும் வரை செலவிடப்பட்ட தொகை ரூ.5,000 கோடியை தாண்டி விட்டதாக கூறுகின்றனர்.
இது இங்கிலாந்து இளவரசி டயானா – இளவரசர் சார்லஸ் திருமணத்துக்கு ஆன செலவை விட (163 மில்லியன் டாலர்) அதிகம் என்கின்றனர்

