


பிறை ஜூலை 17-
பினாங்கு பிறை எம்பிகேகே ஏற்பாட்டில் போவ்லிங் கிண்ண போட்டி கடந்த வாரம் இறுதியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
MBSP கவுன்சிலர் சகோதரர் பொன்னுதுரையும் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் மொத்தம் 40 பங்கேற்பாளர்கள் பங்கேற்று அசத்தினர்.
இதில் அனைத்து இனங்களையும் சேர்ந்த தனிநபர்கள் பங்கேற்று, ஒற்றுமையை மேம்படுத்தினர்.
அனைத்து இனத்தவரும் இந்த போட்டியில் பங்கேற்பைக் கண்டு டத்தோஸ்ரீ ராஜூ மகிழ்ச்சியடைந்தார்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இது எங்களின் முதல் போவ்லிங் போட்டி.
இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டி மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் என்று பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

