ஈஷா வுக்கு எதிராக இணைய பகடிவதை செய்த பெண்ணுக்கு வெறும் 100 வெள்ளி அபராதம்! அமைச்சர் பாமி பட்சில் கடும் அதிருப்தி

கோலாலம்பூர் ஜூலை 17-
ஈஷா என்ற ராஜேஸ்வரியை இணைய பகடிவதை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வெறும் 100 வெள்ளி அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி பட்ஸில் இன்று கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பெண்ணுக்கு குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆனால் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அப்பெண்ணுக்கு அத்தண்டனை விதிக்கப்பட்டதை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தம்மிடம் விளக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

இணைய பகடிவதை வரையறையை நாம் மறுபரிசீலனை செய்து அதற்கான தகுந்த தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈஷா எனப்படும் ராஜேஸ்வரிக்கு இணையம் வாயிலாக மிரட்டல் மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பி.ஷாலினிக்கு பெரியசாமி என்ற பெண்ணுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 100 வெள்ளி அபராதத்தை விதித்தது.

செக்‌ஷன் 14 சிறு குற்றங்கள் சட்டம் 1955இன் கீழ் இவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles