
பெங்களூரு: தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவுடன் முட்டை வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பிரபல தொழிலதிபர் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையுடன் இணைந்து ரூ.1,500 கோடி செலவில் முட்டை வழங்க கர்நாடக பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தற்போது வாரத்துக்கு 2 முட்டைகள் மட்டுமே மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் நிலையில் இனி 6நாட்களும் முட்டை வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
. பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் வாரத்தில் அனைத்து நாட்களும் முட்டை வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மது பங்காரப்ப கூறியுள்ளார்.

