
பிறை ஜூலை 16-
பிறை எம்பிபிகே மற்றும் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஏற்பாட்டில் பல்வேறு வகையான மூலிகைகளில் இருந்து பொடியை தயாரித்து பாரம்பரிய உணவுகளை செய்யும் பயிற்சி திட்டத்தில் பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக பத்துகாவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
பிறை சட்டமன்ற தொகுதியில் உள்ள உள்ள B40 குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உதவும் வகையில் இந்த பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் மகப்பேறுக்கு பிறகு பராமரிப்பிற்கான விரிவான அறிவு மற்றும் நடைமுறை திறன்களை வழங்கும் வகையில் இந்த பயிற்சி முகாம் அமைந்தது..
பயிற்சியின் இரண்டாவது வாரத்தில் பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கான மருத்துவ உணவு தயாரிப்பதைக் கற்பிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது
குறிப்பாக பல்வேறு மூலிகைகளிலிருந்து பொடியைத் தயாரித்து, அதன்பின் பாரம்பரிய உணவுகளை, குறிப்பாக ஆயாம் கம்போங் கறியை சமைக்கப்பட்டது.
பயிற்றுவிப்பாளர் பிரசவத்திற்குப் பிந்தைய உணவு நடைமுறைகளின் முக்கியத்துவத்தை விவரித்தனர்.
வரவிருக்கும் வகுப்பில் பிரசவத்திற்குப் பிறகு பயனுள்ள மசாஜ் மற்றும் சிகிச்சை நுட்பங்கள் கற்று தரப்படும் என்று அவர் சொன்னார்.

