
கோலாலம்பூர், ஜூலை 18 – துல்லியமான சமூக-பொருளாதார அளவீடுகளுடன் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக மலேசிய குடிமக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கும் மத்திய தரவுத்தள மையம் (பாடு), தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் 2024 (சட்டம் 709)க்கு உட்பட்டது அல்ல.
அச்சட்டம் வணிகப் பரிவர்த்தனைகளில் தனிப்பட்ட தரவு செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது என டிஜிட்டல் அமைச்சர் கோபிந் சிங் டியோ கூறினார்.
“எனவே, பாடு 709 சட்டத்திற்கு கட்டுப்பட்டதா என்று நீங்கள் கேட்டால், இல்லை. ஏனெனில், வணிக பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்காக இச்சட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் தரவு பாதுகாப்பு (திருத்தம்) மசோதா 2024 மீதான விவாதத்தின் போது, “அரசாங்க அளவிலான தரவுகளைக் கொண்ட பாடு தொடர்பான மக்களவையில் எழுந்த கேள்விகளுக்கு இது பதிலளிக்கிறது” என்று அவர் கூறினார்.
bernama

