மலேசியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த குறைந்த சர்க்கரை பிரச்சாரம் அறிமுகப்படுத்தப்படும்!

புத்ராஜெயா, ஜூலை 22 : தினசரி உணவில் சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலம்ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து மலேசியர்களுக்குவிழிப்புணர்வை ஏற்படுத்த குறைந்த சர்க்கரை, குறைந்த விலை பிரச்சாரம் அறிமுகப்படுத்தப்படும்.

இப்பிரச்சாரத்தை வடிவமைப்பதற்காக உணவகச் சங்கங்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் அமர்வு ஒன்றை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் பெளசியா சாலே நடத்தினார்.
இதில் கலந்துகொண்டவர்களில் மலேசிய இந்திய உணவக சங்கம் (பிரிமாஸ்), மலேசியன் சிங்கப்பூர் பொது காபி கடை உரிமையாளர்கள் சங்கம் (எம்எஸ்சிஎஸ்பிஜிஏ) மற்றும் மலேசிய முஸ்லிம் உணவக சங்கம் (பிரெஸ்மா) ஆகியவை அடங்கும்.

தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற ஆய்வு (NHMS) 2023 அறிக்கையைக் குறித்து
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் வருத்தம் கொண்டுள்ளது,
இந்த நாட்டில் ஆறில் ஒருவர் அல்லது 15.6 சதவீதம் பேர் சர்க்கரை நோயால்
பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles