
பேராக் மாநிலத்தில் உள்ள ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் கெஅடிலான் தேசிய மகளிர் உதவித் தலைவி வசந்தி சின்னசாமி தனது தீவிர பிரச்சாரத்தின் மூலம் அமோக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2008,2013 இல் நடைபெற்ற தேர்தலில் ஊத்தாங் மெலிந்தாங்கில் கெஅடிலான் வேட்பாளர் கேசவன் வெற்றி பெற்றார்.
2018 இல் நடைபெற்ற தேர்தலில் 300 வாக்குகள் வித்தியாசத்தில் கெஅடிலான் வேட்பாளர் மணிவண்ணன் தோல்வி கண்டார்.
இம்முறை இந்த தொகுதியை பக்கத்தான் ஹரப்பான் வெல்லும் வகையில் வசந்தி சின்னசாமி போட்டியிடுகிறார்
இந்தியர், சீனர் மற்றும் மலாய்க்காரர்கள் இவருக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வரும் நவம்பர் 19 ஆம் தேதி ஊத்தாங் மெலிந்தாங்கில் வசந்தி சின்னசாமி வெற்றி மாலை சூடப்போவது உறுதி என்று வர்ணிக்கப்படுகிறது.


