வயநாடு நிலச்சரிவு: பலி 50 ஆக அதிகரிப்பு; ராகுல் காந்தி, பிரியங்கா விரைகின்றனர்

கேரள: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனால் 400-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது

நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்துவரும் சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாடுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட உள்ளனர்.

மேலும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மீட்பு, நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles