

ஆலயங்களில் சமயச் சொற்பொழிவும் சமய நிகழ்வும் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என கெடா மாநில மலேசிய இந்து சங்கம் பீடோங் வட்டாரப் பேரவையின் 46 ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழாவில் அதன் மாநிலத் தலைவர் விவேக ரத்னா பரமசிவம் கேட்டுக்கொண்டார்.
தரிசனத்திற்கு ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் நமது கலை கலாச்சார உடையில் வருவது உகந்ததாகும்.இதனை ஆலய நிர்வாகம் கருத்தில் கொண்டு அதற்கான அறிக்கைகளையும் அவசியத்தையும் பக்தர்களிடம் வலியுறுத்தி சொல்லி மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.அதோடு ஒவ்வொரு குடும்பத்திலும் வாரத்திற்கு ஒரு முறையாவது அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டுப் பிராத்தனையை நிகழ்த்த வேண்டும்.
இதனால் நமது சமய உணர்வும் மேம்படுத்தவதோடு நமது பிள்ளைகளுக்கு சமயத்தின் விழிப்புணர்வுகளை வழிவகுக்க உதவி செய்யும்.இதனால் மதமாற்றம் போன்ற சமபவங்களை நாம் தவிர்க்க முடியும் என்றார்.
மலேசிய இந்து சங்கம் மட்டும்தான் இந்த நாட்டில் திருமுறைகளை வட்டாரம்,மாநிலம் மற்றும் தேசியம் என போட்டியாக நிகழ்த்தி அதிகமான மாணவர்களை சமய வழிபாட்டில் கலந்துக் கொள்ள வகை செய்து வருகிறது.வேறு எந்த இயக்கமும் செய்யாததை ம லேசிய இந்து சங்கம் மட்டும்தான் செய்து வருவதாக பரமசிவம் பெருமிதம் கொண்டார்.இந்த நாட்டில் உள்ள அதிகமான தமிழ் ஆசிரியர்கள்,தொழில் முனைவர்கள் மலேசிய இந்து சங்கம் நிகழ்த்திய திருமுறை போட்டியில் கலந்து கொண்டவர்களே ஆவர்.இதனால் அவர்கள் நல்ல பண்பாளர்களாகவும் மரியாதைக்கூரியவர்களாகவும் இன்றும் உள்ளனர்.
200க்கும் அதிகமானவர்கள் கலந்துக் கொண்ட கெடா மாநில மலேசிய இந்து சங்கம் பீடோங் வட்டாரப் பேரவையின் 46 ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழாவின ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டு வந்த பீடோங் வட்டாரப் பேரவையினரை அவர் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகராக முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ மோகன்ஷான்,முன்னாள் கெடா மாநிலத் தலைவர் சங்கபூஷன் வேலு அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.போட்டியில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கான பரிசுகள் அனைத்தும் மிகவும் தரம் வாய்ந்தவையாக அமைந்திருந்தன.

