

பூச்சோங் ஆக 3-
பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டத்தோ புத்ரி சிவம் தலைமையில் இன்று கோவில் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பூச்சோங் 14 ஆவது மைல் அரசாங்க கிளினிக் பல் மருத்துவர்கள் தாதியர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு மக்களுக்கு பல் சுகாதாரம் குறித்து சிகிச்சை அளித்ததோடு ஆலோசனையும் வழங்கினார்.
மேலும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளையும் அளித்தனர்.
காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து நன்மை அடைந்தனர்.
கோவில் நிர்வாக செயலாளர் பாஸ்கரன், வெங்கடேஷ் மற்றும் கோவில் இளைஞர் அணி தலைவர் மோகன் தலைமையிலான தொண்டன் படையினரும் இந்த மருத்துவ முகாம் வெற்றி பெற பக்க பலமாக இருந்தனர்

