எஸ்.பி.எம். முடித்த மாணவர்களுக்காக திவேட் தொழில் திறன் பயிற்சி கருத்தரங்கு

பெட்டாலிங் ஜெயா, ஆக. 4-
எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்காக தொழில் திறன் பயிற்சி (திவேட்) மீதான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீப் ரிஷாகரன் ஏற்பாட்டிலான இக்கருத்தரங்கம் வரும் 10.8.24 சனிக்கிழமை காலை மணி 8.00தொடங்கி 11.00 மணி வரை காசிங் இண்டா மண்டபத்தில் நடைபெறும்.


மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது திவேட் பயிற்சி. ஆகையால், இப்பயிற்சி தொடர்பான கருத்தரங்கில் திரளாகக் கலந்து கொண்டு பயனடையுமாறு இந்திய மாணவர்களை சட்டமன்ற உறுப்பினர் ரஜீப், நகராண்மைக் கழக உறுப்பினர் குஷாலினி மகேந்திரன் மற்றும் சமூக தலைவர் சி. ஹரிதாஸ் ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles