அம்பாங் தமிழ் பள்ளியில் கல்வி மாறனின் இலக்கை நோக்கி கருத்தரங்கு !

அம்பாங், ஆக 4-
ஆகஸ்ட் 2 ஆம் தேதி அம்பாங் தமிழ்ப்பள்ளி நான்காம், ஐந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக அம்பாங் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியர்கள் ஏற்பாட்டில் இலக்கை நோக்கி எனும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது..

நாடறிந்த கலைஞரும் பேச்சாளருமான மக்கள் கலைஞர் கவிமாறன் அவர்கள்
நல்லொழுக்கம் மனிதநேயம் உயர்கல்வி விடாமுயற்சி தன்னம்பிக்கை பல்லினஒற்றுமை போன்றவற்றின் கருத்தில் கொண்டு ஒன்றை மணி நேரம் மாணவர்களோடு கலந்துரையாடி கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றினார்.

100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர் . பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு ரவீந்திரன் மற்றும் துணைத் தலைவர் புவன், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி மேனகா பொன்னையா அவர்கள் உரையாற்றினார்கள்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles