
பத்துமலை, ஆக 5-
இந்நாட்டில் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து பாடுபடும்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இந்திய சமுதாயத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி 20,000 க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்களை உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி பணி தொடரும் என்று அதன் துணை நிர்வாக இயக்குனர் சுரேன் கந்தா தெரிவித்தார்.
நேற்று காலையில் பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக கல்வி யாத்திரை விளங்கி வருகிறது.அவ்வகையில் 30ஆவது கல்வி யாத்திரை பத்துமலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஸ்ரீ முருன் கல்வி நிலையத்தின் தோற்றுநரும் தலைமை இயக்குருமான டான்ஸ்ரீ தம்பிராஜா சிறப்புரையாற்றி கல்வி யாத்திரையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

