
பாரிஸ்: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு முன்னேறினார்.
ஒலிம்பிக்கில் தடகளத்தில் இன்று, ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று நடக்கிறது.
இந்தியா சார்பில் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா உட்பட இருவருடன் சேர்த்து மொத்தம் 32 பேர் களமிறங்குகின்றனர்.
நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பிலேயே 89.34 மீ., தூரம் ஈட்டி எறிந்து பைனலுக்கு முன்னேறினார்.
நாளை மறுநாள்( ஆக.,08) பைனல் நடைபெற உள்ளது.

