கோலாலம்பூர்:ஆக. 8-
மஇகாவின் தேசிய தலைமை செயலாளராக டத்தோ எஸ். ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் கட்சியின் நிர்வாகச் செயலாளராக டத்தோ ஏடி குமரராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
மஇகா கட்சித் தேர்தலுக்கு நடந்த முதல் மத்திய செயலவைக் கூட்டம் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இப்புதிய நியமனங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக டத்தோ ஆர்டி ராஜசேகரன் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். ஒரு சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டு அப்பதவிக்கு டத்தோ ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.