சுங்கை பூலோவில் வசதி குறைந்த 300 பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு!

காளிதாஸ் சுப்ரமணியம்

சுங்கை பூலோ: ஆக 10-
சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான உதவிகள் தொடரும் என்று அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர் இரமணன் ராமகிருஷ்ணன் இன்று அறிவித்தார்

அந்த வகையில்
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்கும் பெர்னாஸ், ஃபோகஸ் போயிண்ட் நிறுவனத்துடன் இணைந்து இன்று 300 பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கியதற்காக பெர்னாஸ், ஃபோகஸ் போயிண்ட் நிறுவனத்துக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று இத்தொகுதியில் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

அதே வேளையில் மக்கள் பயன் பெறும் நோக்கிலும் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

அதன் அடிப்படையில் இங்குள்ள பிபிஆர் குடியிருப்புகள் உட்பட வசதிக் குறைந்த மக்களுக்கு வீட்டு வீடு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

இன்றைய நிகழ்வில் பெர்னாஸ் தலைமை நிர்வாகி மஸ்லான், ஃபோகஸ் போயிண்ட் நிறுவனத்தின் தலைவர் டத்தோ லியூ சூன் லியாங், துணையமைச்சர் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles