பேரா மாநில ம.இ.கா. புத்ரா மாநாடு! இளைஞர்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை அவசியம்! டத்தோ இளங்கோ வலியுறுத்தினார்

ஈப்போ, ஆக 11-
பேரா மாநில ம.இ.கா. பத்ராவின் 13 ஆவது பேராளர் மாநாடு சுங்கை சிப்புட் தேசிய முன்னணி அலுவலகத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த மாநாடு அதன் தேசியத் தலைவர்
டாக்டர் சதீஸ் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் பெரும் திரளானோர் கலத்துக்கொண்டனர்.

இந்ந மாநாட்டை டத்தோ வ. இளங்கோ தொடக்கி வைத்து உரையாறினார். அவர் தமது உரையில் கடந்த காலங்களில் . உறுப்பினர்கள் குறைவாக இருந்தனர். இன்று அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வலுவூட்டியுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார்.

கட்சியில் எதையும் எதிர்பாரத்து வரக் கூடாது. முதலில் சேவை வழங்குங்கள் அதே சமயத்தில் கட்சி தலைமைத்துவத்தின் நடவடிக்கை ஆதரவு வழங்கவேண்டும் . உரிய காலத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.

நாங்கள் கட்சியில் உறுப்பினர்களாக சேரும்போது எதையும். எதிர் பார்த்து சேரவில்லை் எங்களால் முடிந்த சேவைகளை ஆற்றி வந்தோம். இன்று மாநில நிலையில் சேவையாற்றக் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டது என்றா்.

இந்த நிலையை புத்ராவினரும் அடைய உங்கள் சேவையை தொடர்ந்து வழங்குமாறு டத்தோ இளங்கோ வடிவேலு கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பேசிய தேசிய ம.இ.காவின் புத்ரா தலைவர் டாக்டர் சத்தீஸ்குமார் , புத்ராவினர் நாடு முழுவதிலும் சிறப்பான முறையில் சேவையாற்றிட உரிய நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக குறிப்பிட்டார்.

இளைஞர்களை ஒருங்கிணைக்க கல்வி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக பேரா மாநில ம.இ.கா. புத்ரா தலைவர் வெண்ணிலவன் பரந்தாமன் உரையில குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles