

ஷா ஆலம், ஆக. 9- கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற கோத்தா
கெமுனிங் சட்டமன்றத் தொகுதியிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 147 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதியாக இன்று 35,000 வெள்ளி வழங்கப்பட்டது.
இன்று 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை எம்பிஎஸ்ஏ ஏஸ்தர் மண்டபம், ஜாலான் கெமுனிங் டாமாய் 32/151, புக்கிட் ரீமாவ், ஷா ஆலமில் மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊக்குவிப்பு நிதியை பெற்றுக் கொண்ட மாணவர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர்.
கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையேற்று மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதியை வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 10 ஏ, 9ஏ மற்றும் 8 ஏ பெற்ற மாணவர்கள் ஊக்குவிப்பு தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்த வெகுமதி வழங்கப்பட்டதாக பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரி சாமிநாதன் மற்றும் ராமு நடராஜன், கிராமத் தலைவர் கோபி தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

