கோலலங்காட்டில் மணிவண்ணன் அதிக வாக்குகளில் வெற்றி பெறுவது உறுதி

கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் கெஅடிலான் கட்சி உச்சமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் அமோக வெற்றி பெறுவது உறுதி என்று வர்ணிக்கப்படுகிறது.
கோலலங்காட்டில் 1 லட்சத்து 48,000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 19,000 இந்தியர்கள் 23 000 சீனர்கள் ஆவார். மற்றவர்கள் மலாய்க்காரர்கள்.

கடந்த தேர்தலில் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் சேவியர் வெற்றி பெற்றார் .

இம்முறை மணிவண்ணனை எதிர்த்து ஐந்து பேர் போட்டியிடுகிறார்கள்.

கோலலங்காட் பக்கத்தான் ஹரப்பான் கோட்டை என்பதால் இம்முறையும் பக்கத்தான் ஹரப்பான் அமோக வெற்றி பெறும் என்று கோலங்காட் தொகுதி கெஅடிலான் தலைவர் ஹரிதாஸ் தெரிவித்தார்.

பக்கத்தான் வேட்பாளர் மணிவண்ணனுக்கு இந்தியர்கள் ஆதரவு பெரும் உற்சாகம் தருகிறது.

மேலும் சீனர்கள் மலாய்க்காரர்கள் மத்தியில் பக்கத்தானுக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles