
தேசிய முன்னணி கோட்டை என்று வர்ணிக்கப்படும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் 4 தவணையாக ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் போட்டியிடுகிறார்.
தாப்பா நாடாளுமன்றத்தில் இவரை தெரியாத வாக்காளர்களே இல்லை என்று கூறலாம்.
இந்நிலையில் டத்தோஸ்ரீ சரவணனை எதிர்த்து பக்கத்தான் ஹரப்பான் சார்பில் பிரபல வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி களம் இறங்கி உள்ளார்.
அரசியலில் அடிக்கடி மோதிக் கொள்ளும் இவர்கள் இருவரும் இப்போது தாப்பாவில் வெற்றி கனியை பறிக்க மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மதியம் 2.30 மணிக்கு மேல் தாப்பாவில் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்.
நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்பார் என்று வர்ணிக்கப்படும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகையால் தாப்பா அதிரும் என்பதில் ஐயமில்லை.
டத்தோஸ்ரீ அன்வாரின் பிரச்சாரம் சரஸ்வதி கந்தசாமிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

