
நாடே எதிர்பார்க்கும் ஒரு தேர்தல் களமாக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி விளங்குகிறது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நம்பிக்கைக்குரிய டாக்டர் சத்யா பிரகாஷ் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் உலு சிலாங்கூரில் களம் இறங்கி உள்ளார்.
மண்ணின் மைந்தரான டாக்டர் சத்யா பிரகாஷ் கடந்த இப்போது வெற்றி பெறும் இலக்கில் தனது ஆதரவாளர்களுடன் வீடுவீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இதனிடையே தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி மோகனும் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.
தேர்தலில் வாக்களிக்க இன்னும் ஒரு வாரமே இருப்பதால் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி இருப்பதால் உலு சிலாங்கூரில் அனல் பறக்கிறது.

