
தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர்கள் தங்களது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க தொடை நடுங்குகிறார்கள் என்று கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடியுள்ளார்.
கெஅடிலான் கட்சியில் போட்டியிடும் 72 வேட்பாளர்களும் சொத்துக்களை அறிவித்து விட்டனர்.
நானும் கெஅடிலான் கட்சி துணை தலைவர் ரபிஸி ரம்லியும் சொத்துக்களை அறிவித்து விட்டோம்.
ஆனால் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னமும் சொத்துக்களை அறிவிக்க பயப்படுகிறார்கள் என்று அவர் சாடினார்.

