
பெரும் சிக்கலில் சிக்கி கொண்டிருக்கும் அம்னோவை முதலில் சீர்படுத்த வேண்டும்.
எல்லா விவகாரங்களுக்கும் என்னால் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
அம்னோ பல நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதை சீரமைக்க வேண்டுமானால் நான் முதலில் வெற்றி பெற வேண்டும்.
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பிரதமராக்குவதை உறுதி படுத்த வேண்டும்.
அம்னோவில் எல்லா நேரத்திலும் என்னால் ஆமாம் சாமி போட முடியாது என்று அவர் கடுமையாக சாதி உள்ளார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டத்தோ ரமணன் மற்றும் கைரி இடையே இப்போது கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

