எந்த இடத்தில் வாக்களிப்பது! விரைந்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்!

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு வரும் நவம்பர் 19 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறுகிறது.

முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் எந்த நாடாளுமன்றத் தொகுதி மற்றும் எந்த இடத்தில் வாக்களிப்பது என்பதை விரைந்து semak sprm மூலம் பரிசோதித்து கொள்ளும் படி ஈப்போ பாராட்டில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் எம் குலசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்னும் ஒரு வாரமே இருப்பதால் வாக்காளர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை வாக்களிக்கும் இடத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனிடையே ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் குலசேகரன் 5 ஆவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles