
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர்: ஆக 17-
வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான வன்முறை தாக்குதல்களை மலேசிய மக்கள் சக்தி கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.
வங்களாதேசத்தில் கடந்த சில நாட்களாக இந்துக்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
மாணவர்களின் உரிமை போராட்டமாக தொடங்கிய போராட்டம் இப்போது சிறுபான்மையினர் மீது திரும்பியுள்ளது.
இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறை, திட்டமிட்ட கொலை, சொத்துக் கொள்ளை போன்ற சம்பவங்களை பொறுத்துக் கொள்ள முடியாது.
ஆக இத்தாக்குதலுக்கு முடிவுக்கட்ட உலக நாடுகளின் தலைவர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இவ் விவகாரத்திற்கு தொடர்ந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

