
கோலாலம்பூர்: ஆக 17-
உள்துறை அமைச்சு இதுவரை கிட்டத்தட்ட 14,000 குடியுரிமை விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று அதன்
அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கூட்டரசு அரசியலமைப்பின் 15ஏ பிரிவின் கீழ் விண்ணப்பத்தின் ஒப்புதலில் 75 சதவீதம் அங்கீகரிக்கப்படாத குழந்தைகள், வளர்ப்பு குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்டவையாகும்.
எஞ்சியவை வெளிநாட்டு கணவர் அல்லது மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் பிரச்சினைகளாகும்.
ஆகையால் அமைச்சு இதுதொடர்பான அரசியலமைப்பை திருத்த விரும்புகிறது.இது இக்குழந்தைகளை தானாக அல்லது சட்டத்தின் மூலம் அனுமதிக்கும் .
மேலும் ஒரு வெளிநாட்டவர் உள்ளூர் ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.இவர்களும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் இங்கே திருமணம் செய்துகொள்கிறார்கள். இங்கே வாழ்கிறார்கள். அவர்களுக்கு இங்கே குழந்தைகள் உள்ளனர்.
ஆகவே, அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.இதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையிலும் சட்டத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளது என்று அவர் சொன்னார்.
bernama

