பெண்டாக்டர்படுகொலைஎதிரொலி: நாடுமுழுவதும்டாக்டர்கள் ‘ஸ்டிரைக்’

புதுடில்லிகோல்கட்டாவில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திய மருத்துவ சங்க சங்கத்தினர் அழைப்பு விடுத்த 24 மணி நேர ஸ்டிரைக் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது;

புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் காரணமாக, மருத்துவர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

reuters

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles