பல ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கிய ஒரே கட்சி மஇகாதான்!

கோலாலம்பூர் ஆக 18-

22வருடக் காலமாக மஇகா தேசியத் தலைவராக துன் ச.சாமிவேலு இருந்து வந்துள்ளார்.அவரது காலக்கட்டத்தில் நடந்த அனைத்து மாநாடுகளையும்,மத்திய செயலவைகளையும் அனைத்து நடவடிக்களையும் அவர் மட்டும்தான் திறந்து வைத்து கட்டாயமாக உரையாற்றுவார்.

துணைத்தலைவராக இருந்த வந்த டான்ஶ்ரீ எஸ்.சுப்பிரமணியத்திற்கு எந்த வித வாய்ப்புகளும் மாநாடு மற்றும் மத்திய செயலவைக்கு தலைமையேற்பதற்கு வாய்ப்புகளை அவர் வழங்கியதே இல்லை.
இன்றையக் காலக்கட்டத்தில் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது தலைமைத்துவத்தில் கட்சியின் துணைத்தலைரான டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்ககு அதிகமான வாய்ப்புகளை வழங்குகிறார்.

இது எதைக் காட்டுகிறது என்றால் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கட்சியின் மேல் கொண்ட அதிகமான பற்றால் கட்சி மேலும் ஒற்றுமையுடன் என்றும் திகழவேண்டும் என்ற நல்ல பண்பை உயர்த்திக் காட்டுகிறது.அவரின் இந்த நடவடிக்கை கட்சி ஒற்றுமையாகவும் வலுமையாகவும் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்சிகளில் மஇகாவின் பங்களிப்பு அதிகம் உள்ளது.

நாட்டின் தாய் கட்சியான மஇகா மொழிக்கும், சமயத்திற்கும் இந்தியர்களின் ஒற்றுமைக்கும் முதுகெழும்பாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

மஇகாவில் இருந்து பிரிந்த தங்களது சுயநலத்திற்காக 15க்கும் மேற்பட்ட இந்தியக் கட்சிகள் உருவாகி உள்ளன.

சுயநலத்திற்காக அப்படி உருவாகிய இந்தக் கட்சிகள் எல்லாம் பெருமபான்யாக தங்களது கூட்டத்தைக் கூட்டி இதுவரை நிருபத்ததில்லை.
தொகுதி கூட்டங்கள்,மகளிர் கூட்டங்கள் இளைஞர் அணி,புத்ரா மற்றும் புத்ரி கூட்டங்கள்,மாநிலம் என மஇகா எனும் மாபெரும் கட்சி தங்களது பேராளர்களின் செல்வாக்கோடு கூட்டங்கள் நடத்தி தனித்து திகழ்கிறது.

நடத்தப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் மண்டபம் நிறைந்து வழிந்து இருப்பதை செய்திகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. பேராளர்கள் மாநாட்டுக்கு மஇகா சின்னத்துடன் உடைகளை அணிந்து திரண்டு வருகின்றனர்.

இது மஇகா பலம் பொருந்திய கட்சியாக திகழ்வதை எடுத்துக் காட்டுகிறது. தங்களது தனிப்பட்ட சுயநலத்திற்காக மஇகாவை விட்டு போனவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விக்கும் மற்ற தேவைகளுக்கும் உதவி கேட்டு டான்ஶ்ரீ விக்னேஸ்வரைன் உதவியத்தான் தேடி போய்க் கொண்ருகின்றார்கள்.

நாடி வந்தவர்களுக்கு அவரும் இல்லை எனச் சொல்லாமல் சமுதாயத்தின் மேல் கொண்ட பற்றினால் உதவியினை தொடர்து செய்து வருவது அவரின் பெரும் தன்மையினை குறிக்கிறது.

டேப் கல்லூரி,எய்ம்ஸ்ட் என பல்கலைக்கழகங்களை நிறுவி பல ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கிய ஒரே கட்சி மஇகாதான். ஆதலால் மஇகாவை

தவறாக சித்தரித்து குளிர்க் காய்பவர்கள் உடனடியக இதுபோன்ற நடவடிக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வண்ணம்
செபூத்தே எஸ்.எஸ்.இராமமூர்த்தி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles