மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்வு இருக்கை! மிகப்பெரிய சாதனை என்கிறார் டத்தோ டாக்டர் கு செல்வராஜ்!

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஆக 23-
மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் திருவள்ளுவர் ஆய்வு இருக்கை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும் என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தெரிவித்தார்.

இதன் மூலம் திருக்குறளின் புகழை மேலும் பரவ செய்யும்.

மலேசிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹ்ஹிம் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றிருந்தார்.

இப் பயணத்தின் போது இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகள், அறிவியல் தொழில் நுட்பம் , சுற்றுலா வேலை சந்தை, ஆயூர்வேடிக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் குறிப்பாக மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை நிறுவ வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி முன்வைத்த கோரிக்கையை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உடனே ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் வழங்கியது மிகப்பெரிய பாராட்டுக்கள்.

நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல மேடைகளிலும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போதும் திருக்குறளை சுட்டிக் காட்டி பேசுவார்.

அந்த வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு இந்திய சமுதாயத்தின் சார்பில் மீண்டும் வாழ்த்துகளை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சியை அடைகிறேன்.

இது, மலேசியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

மேலும் திருக்குறளின் புகழை இம்முயற்சியின் வாயிலாக பரப்ப வாய்ப்புகள் கிட்டும்.

அதே வேலையில் திருக்குறள் அனைத்து மக்களிடமும் சென்றடையும்.

திருவள்ளுவரின் பெருமையையும் உலகு நன்கு அறிய வாய்ப்பளிக்கும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles