
கோலாலம்பூர் ஆக 25-
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிலுள்ள மலாயான் மன்ஷன் எதிரே ஏற்பட்ட நீர் அமிழ்வில் சிக்கிக் கொண்ட இந்தியச் சுற்றுப் பயணி விஜயலெட்சுமி புதையுண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
தற்போது அவரை தேடும் பணி தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று மஸ்ஜித் இந்தியாவுக்கு வருகை புரிந்த பாப்பா ராயுடு நிலவரங்களை தேரில் கேட்டறிந்தார்.
அப்போது விஜயலெட்சுமியின் கணவர் மாதவனை நேரில் சந்தித்த பாப்பா ராயுடு ஆறுதல் கூறினார்.
என் மனைவியை கண்டு பிடித்து தரும்படி அவர் கண்ணீரோடு கேட்டுக் கொண்ட சம்பவம் மனதை நெகிழ வைத்தது.