சவால்களை சமாளித்து கல்வி கற்ற சமுதாயமாக நாம் விளங்க வேண்டும்!டத்தோஸ்ரீ ராஜா வேண்டுகோள்

பிறை ஆக 29-
பினாங்கு மாநில பிறை சட்டமன்ற தொகுதியில் அண்மையில்
“Aspirasi Kanak-Kanak Perwira நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ இந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்து உரையாற்றினார்

நவீன சமுதாயத்தில் பெண்கள் மீது திணிக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்தச் சவால்களைச் சமாளிக்க கல்வி மற்றும் விழிப்புணர்வின் அவசியம் போன்ற விஷயங்களை அவர் விவாதித்தார்.

இந்த தடைகளை கடப்பதில் குடும்ப ஆதரவின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

மலேசியர்களாகிய நாம் கல்வி கற்ற சமுதாயமாக விளங்க வேண்டும்.

அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பற்றி அவர் ஆழமாக விவரித்தார்.

பிறை எம்பிபிகே சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles