பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது!

பிறை ஆக 29-
தாய்மார்களுக்கான பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு பயிற்சி பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

எட்டு வாரங்கள் கொண்ட இந்த பயிற்சி இதுவரை வெற்றிகரமாக 4 வாரங்களை முடித்து விட்டது.

பிறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ மற்றும் பிறை எம்பிபிகே ஆதரவில் இந்த பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது என்று பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

பிறந்து ஒரு மாதம் தொடங்கி 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளைப் பராமரிப்பது குறித்த வழிமுறைகளை தாய்மார்களுக்கு பயிற்றுவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குழந்தைகளை இளம் பிராயம் முதல் மிகுந்த அக்கறையுடன் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கிலான இந்த பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்..

இந்தப் பயிற்சி பிள்ளைகளை முறையாக வளர்ப்பது குறித்த விஷயங்களை மட்டுமின்றி தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதற்கும் அவர்களை பயிற்றுவிப்பதற்கும் தேவையான அனுபவங்களையும் பெற்றோர்களுக்கு வழங்குகிறது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles