தித்தி வங்சா ம இகா தொகுதி காங்கிரஸின் ஒற்றுமை நல்லெண்ண விருந்து நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது!

எம் பவளச்செல்வன்

கோலாலம்பூர், செப் 1
நிதி திரட்டும் வகையில் தித்தி வங்சா தொகுதி காங்கிரஸ் ஏற்பாட்டில் ஒற்றுமை நல்லெண்ண விருந்து நிகழ்ச்சி இன்று தாமான் மலூரி 3 Brown Boys Event Hall மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தித்தி வங்சா தொகுதி காங்கிரஸ் காப்பாளர் மற்றும் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினர்- தோட்டத் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி முக்கிய பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.

தித்தி வங்சா தொகுதி காங்கிரஸ் தலைவர் பி.அரசு தலைமையிலான தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்தினர்.

விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ சைமன் ராஜா , டத்தோ சுரேஸ், டத்தோ தீனாளன், டத்தோ அசோஜன், ஆர் டி.சுந்தரம், லெம்பா பந்தாய் தொகுதி தலைவர் கணேசன், கெப்போங் தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, டத்தோ பெரு. கருப்பன், பத்து பாலகுமாரன், செராஸ் டேவிட் மலூரி, வழக்கறிஞர் நடராஜன், உஷா நந்தினி அண்ட்ரூ டேவிட், செராஸ் நலேந்திரன், இளைஞர் அணி தலைவர் அரவிந்த் கிருஷ்ணன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் எஸ். வேணுகோபால் வரவேற்புரையாற்றினார்.

தித்தி வங்சா தொகுதி காங்கிரஸ் தலைவர் பி. அரசு தமது உரையில் இந்த விழா வெற்றி பெற ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் காப்பாளராக இருந்து எங்களுக்கு முழு ஆதரவு வழங்கி கொண்டிருக்கிறார்

மேலும் தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி வழங்கி கொண்டிருக்கும் ஆதரவுக்கும் அரசு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

விழா ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ராஜா காளிமுத்து, டாக்டர் வி.எம்.ரவி, ஆறுமுகம், முத்துக்குமரன், நடராஜா, இளங்கோவன், தமிழ் ஈஸ்வரன் சிசிலியா கார்த்திக், லில்லி ஜோசப்பின், சக்திஸ், உஷா நந்தினி, ஆர்டி சுந்தரம் ஆகியோரும் விருந்து நிகழ்ச்சி வெற்றி பெற துணை நின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles