பாரிஸ், செப் 3-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டியில் இன்று மலேசியா முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்தது.
மலேசிய நேரப்படி இன்று காலையில் நடைபெற்ற ஆண்களுக்கான SU5 , பிரிவுக்கான பேட்மிண்டன் இறுதி ஒற்றையர் ஆட்டத்தில் மலேசிய வீரர் cheah liek hou வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 21-13, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தோனேசியா வீரர் சூரியா நெகுவோர்வை வீழ்த்தி அவர் தங்கம் வென்றார்.
கடந்த 2020 தோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் இவர் இதே பிரிவில் தங்கம் வென்றார்.
இப்போது பாரிஸ் பரா ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.