
காளிதாஸ் சுப்ரமணியம் ,
எம் பவளச்செல்வன்
கோலாலம்பூர், செப்.6-
வீட்டுப் பணிப்பெண்கள் விவகாரத்தில் இந்திய ஆடவர் ஒருவர் சுமார் 16 பேரை ஏமாற்றியுள்ளார் என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் சுமார் வெ.150,000 வரை அந்த நபரிடம் வழங்கி ஏமாந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கபடவில்லை.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் வெ.8 ஆயிரம் முதல் வெ.19 ஆயிரம் வரை சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுத்துள்ளனர்.
அந்நபர் வழங்கிய வீட்டுப் பணிப்பெண்கள் சில நாட்களுக்கு வேலை செய்த பின்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மாற்று பணிப்பெண்ணை வழங்குவதாக கூறியும் செலுத்திய பணத்தை திருப்பி தருவதாக கூறியும் அந்நபர் ஏமாற்றியுள்ளார்.
அவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.