செப். 15 ஆம் தேதிஷா ஆலம் ஐடிசிசி மண்டபத்தில்ம இகா தேசிய பேராளர் மாநாடு!டத்தோஸ்ரீ சரவணன் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கோலாலம்பூர், செப் 9-
மஇகாவின் 78ஆவது பேராளர் மாநாடு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ஷா ஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெறுகிறது என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.

இம்முறை பேராளர் மாநாட்டில் 1,700 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிட் இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுவார் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் முன்னெடுக்கப்பட்டும் முதன்மை தீர்மானங்களில் 3R விவகாரமும் ஒன்றாகும்.

மேலும் தொகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து தொகுதிகளும் கட்சியின் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவை வழங்குவதும் தீர்மானத்தில் உள்ளதாக அவர் சொன்னார்.

இதனிடையே
3 ஆர் விவகாரத்தில் பாரம்பட்சம் பார்க்கப்பட்டு தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

இதில் இந்தியர்களுக்கு முறையான நியாயம் கிடைக்கவில்லை என்றும் இது சமுதாயத்திற்கு திருப்திகரமாக இல்லை என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles