செப்டம்பர் 13 முதல் 15 ஆம் தேதி வரைதலைநகரில் 15 ஆவது கோபியோ அனைத்துலக மாநாடு!

காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் செப் 9-
மலேசியாவில் வெற்றிகரமாக செயல் பட்டு வரும் கோபியோ ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 15 ஆவது கோபியோ அனைத்துலக மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று ஏற்பாட்டுக் குழு தலைவர் ரவிந்திரன் அர்ஜுன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் 12 நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை உலகளாவிய இந்தியர்களின் கட்டமைப்பை வலுப்படுத்தல் என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தொழில் வல்லுனர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், சமூக தலைவர்கள், வணிகர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு மாபெரும் மாநாடாக இது விளங்குகிறது என்றார்.

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் கீழ் உள்ள செராஸ் அனைத்துலக இளைஞர் மையத்தில் ஆற்றல்மிக்க இளைஞர் மாநாடு நடைபெறுகிறது.

அதன் பின்னர் செப்டம்பர் 15 ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் ஆசிய கல்லூரியில் PIO CEO மாபெரும் கருத்தரங்கு நடைபெறுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles