3ஆர் விவகாரத்திற்கு துல்லியமான வரையறைகளை அரசு வழங்க வேண்டும்: கண்பதிராவ் வேண்டுகோள்

கிள்ளான்: செப் 10-
நாட்டில் 3ஆர் விவகார பிரச்சினைகளுக்கு துல்லியமான வரையறைகளை அரசு வழங்க வேண்டும் என்று
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

3ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர் விவகாரம் தொடர்பில் எழும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

ஒரு சில விவகாரம் ஒரு சில குழுவினருக்கு சரியாக இருக்கும். ஆனால் அது மற்றவர்களுக்கு புண்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது.

இந்த தெளிவின்மை குழப்பத்திற்கும், சீரற்ற அமலாக்கத்திற்கும் வழிவகுக்கிறது.

தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல், தனிநபர்கள், குழுக்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படும்.

குறிப்பாக அவர்கள் தண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆகையால் 3ஆர் விவகார பிரச்சினைகளுக்கு துல்லியமான வரையறைகள் இருக்க வேன்டும்.

இது 3ஆர் சிக்கல்களை தெளிவாக வரையறுப்பது தவறான பயன்பாட்டைத் தடுக்கும்.

மேலும் அனைத்து மக்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் என்று கணபதிராவ் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles