
பிறை,செப் 10-
சீனர்களின் தங் லோங் பெருநாளை முன்னிட்டு பிறை எம்பிபிகே தலைவர்கள் தாமான் செனாங்கியில் களம் இறங்கி
சிவப்பு பீன் மற்றும் தாமரை ஆகிய இரண்டு சுவையான நிலவுக் கேக்குகளை விநியோகித்தனர்
மேலும் இந்த பகுதியில்
தெருவிளக்குகள் பழுதடைதல், வடிகால் பிரச்சனைகள் அல்லது சாலைப் பிரச்சனைகள் போன்ற தொடர்புடைய எந்தவொரு பிரச்சனைக்கும் அவற்றைப் பயன்படுத்த குடியிருப்பாளர்களை ஊக்குவித்தோம் என்று பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
குடியிருப்பாளர்களிடமிருந்து நான்கு புகார்களைப் பெற்றுள்ளோம்.
பிறை எம்பிபிகே அலுவலகத்துடன் கலந்தாலோசித்த பிறகு உடனடியாக இந்த புகார்களுக்கு தீர்வு காண்போம் என்று அவர் சொன்னார்.
அனைவரும் வளமான மற்றும் ஆரோக்கியமான பௌர்ணமி திருவிழாவை கொண்டாடுவார்கள் என நம்புகிறோம் என்றார் அவர்.

